அவசரகால சட்ட பிரகடனத்தை இரத்துச் செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!
#SriLanka
Reha
3 years ago

சமகால நிலைமைக்கு அவசரகால சட்டம் தீர்வாகாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுக்கூடுதல் என்பன பொதுமக்களின் அடிப்படை உரிமைகளாகும்.
இந்த நிலையில், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல் என்பனவற்றுக்கு, அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தக்கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, அவசரகால சட்ட பிரகடனத்தை இரத்துச் செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.



