தேயிலை ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி 23 வருடங்களின் பின் குறைந்த மட்டம்
#SriLanka
#Export
#Tea
Mugunthan Mugunthan
3 years ago

உரத்தடை மற்றும் உக்ரைன் போரினால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 23 வருடங்களில் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதிப் பொருளாக தேயிலை உள்ளது. தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு முன், ஆண்டுக்கு 1.3 பில்லியன் அமெரிக்க டொலரை இது ஈட்டி வந்தது.
எனினும் தற்போது 1948 இல் சுதந்திரத்திற்குப் பிறகு மிக மோசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.



