இலங்கை நாடாளுமன்றத்திலும் அமைதியின்மை!
Nila
3 years ago

நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள நிலையில் பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்துக்கு வெளியே பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாராரைப் பிரயோகத்துக்கு நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டதையடுத்து நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதனையடுத்து நாடாளுமன்ற அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



