’பாராளுமன்றில் 65 பேர் மாத்திரமே மக்கள் பக்கம்’ !! - இரா. சாணக்கியன்
#SriLanka
#Parliament
#people
Mugunthan Mugunthan
3 years ago

பாராளுமன்றில் 65 பேர் மாத்திரமே மக்கள் பக்கம் உள்ளார்கள். 148 பேர் ராஜபக்ஷர்கள் பக்கமே உள்ளார்கள் எனவும் சுயாதீனமாக செயற்படுகிறோம் என குறிப்பிட்டுக்கொள்ளும் தரப்பினரது அரசியல் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் தெரிவு ஊடாக பாராளுமன்றில் இடம்பெறும் அரசியல் நாடகம் வெளிப்பட்டு விட்டது எனவும் பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது சாணக்கியன் தெரிவித்துள்ளார்
நம்பிக்கையில்லா பிரேரணையின் போது இந்த நாடககாரர்கள், திருடர்கள் ராஜபக்ஷர்களை முழுமையாக பாதுகாப்பார்கள். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக இவர்கள் வாக்களிக்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



