ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்க தடை!

#world_news #Afghanistan #Lanka4
Shana
3 years ago
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்க தடை!

கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கனிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் நேட்டோ படைகள் பின் வாங்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.

தலிபான்கள் ஆட்சி அமைத்த பிறகு மீண்டும் மனித உரிமை மீறல், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. சில நாள்களுக்கு முன், 6 ஆம் வகுப்பிற்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல தடை விதித்தனர். இந்த சம்பவத்திற்கு உலகளவில் பல்வேறு நாடுகள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஆப்கான் தலைநகர் காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்க தலிபான்கள் தடை விதித்துள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து, சர்வதேச உதவிகள் நிறுத்தப்பட்டதால் உணவு பாதுகாப்பின்மையில் உலகளவில் முதல் இடத்திற்கு ஆப்கானிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.

 2.3 கோடி மக்கள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். மேலும், மொத்த மக்கள் தொகையில் 95 சதவீதம் பேர் சரியான உணவு கிடைக்காமல் உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!