பிரான்ஸ் சுப்பர் மார்க்கெட்டுகளில் வெறுமையாகியுள்ள அலுமாரிகள் - நெருக்கடியில் மக்கள்

பிரான்ஸ் முழுவதும், சுப்பர் மார்க்கெட்களில் பாரியளவு உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுப்பர் மார்க்கெட்களின் அலுமாரிகள் வெறுமையாகியுள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
உக்ரைனில் போர் அதிகரித்து வரும் நிலையில் ஐரோப்பிய நாடு முழுவதும் பணவீக்கம் தீவிரமடைந்துள்ளது. இதனால் செலவுகள் மற்றும் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இந்த நிலைமை நீடித்தால் பிரான்ஸ் உணவு நிலை தொடர்பான பதற்றங்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எண்ணெய் , மா அல்லது பாஸ்தா போன்ற உணவு பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் உறைந்த உருளைக்கிழங்கு மற்றும் முட்டைகள் போன்றவற்றிற்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுப்பர் மார்க்கெட் தொடர்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில் முதல் முறையாக இதற்கு பொருட்களின் கையிருப்பு குறைந்து வந்தது. எனினும் தற்போதைய நிலையில் அலுமாரிகள் வெறுமையடைந்துள்ளது.
மேலும் 60 சதவீதமான அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றதென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ரஷ்ய - உக்ரைன் போர் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் கோதுமை மாவு தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணமாகியுள்ளது. எனினும் பறவை காய்ச்சல் காரணமாக கோழி முட்டை உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் முட்டை விலை அதிகரித்துள்ளதுடன், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் விலங்குகளின் தீவினங்களின் விலைகள் அதிகரித்து வருவதனால் உற்பத்தியாளர்கள் கடுமையான நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளனர். மேலும் இறைச்சிகளின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளது.



