வீதித் தடைகளை அகற்றுமாறு மனுத்தாக்கல்

Prabha Praneetha
3 years ago
வீதித் தடைகளை அகற்றுமாறு  மனுத்தாக்கல்

கொழும்பு மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களில் உள்ள நிரந்தர வீதித் தடைகளை அகற்றுமாறு வலியுறுத்தி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கம்பஹா பகுதியைச் சேர்ந்த ஷெனால் ஜயசேகர மற்றும் சமூக ஆர்வலர் ஹேமந்த விதானகே ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இதன் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வீதி அபிவிருத்தி அதிகார சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரிமாளிகை மற்றும் கோட்டைப் பகுதியை அண்மித்த பகுதிகளில் பொலிஸாரால் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வீதித் தடைகள் பொதுமக்களின் அடிப்படை உரிமையான நடமாடும் சுதந்திரத்தை மீறுவதாக மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!