சட்டவிரோத முறையில் கஜமுத்துகளை விற்பனை செய்ய முற்பட்ட ஒருவர் கைது
Prabha Praneetha
3 years ago
.jpg)
சட்டவிரோதமான முறையில் கஜமுத்துகளை விற்பனை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அம்பாறை மாவட்டம் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அறுகம்பை பிரதேசத்தில் நேற்று இரவு சந்தேக நபர் தனியார் விடுதி ஒன்றில் வைத்து கைதானார்.
குறித்த கஜமுத்துக்களை விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட நிலையில் விசேட அதிரடிப்படையின் சூட்சுமமான முறையில் சந்தேக நபருடன் உரையாடி கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து யானை கஜ முத்துக்கள் -07 , சிற்பி முத்து -6 என்பன கைப்பற்றப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.



