ஆர்பாட்டக்காரர்களின் சகல உடமைகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு.
#SriLanka
#Protest
#Lanka4
Shana
3 years ago

அலரி மாளிகைக்கு அருகில் உள்ள வீதியில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களின் சகல உடமைகளையும் அகற்றுமாறு பொலிஸாருக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடைபாதைக்கு தடங்கல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், குறித்த தரப்பினரின் உடமைகளை அகற்ற உத்தரவிடக் கோரி பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் அமைதியானதும் மக்களுக்கு இடையூறு அற்றதுமான போராட்டங்களுக்கு தடை இல்லை எனவும் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.



