வீதியில் பெண் ஒருவரின் ரகளையால் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி
#SriLanka
#Polonnaruwa
#Police
Mugunthan Mugunthan
3 years ago

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் இருந்து ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மீது மனம்பிட்டி குடாவெவ பிரதேசத்தில் பெண் ஒருவர் கற் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரால் எறியப்பட்ட கல்லில் இருந்து தப்பிக்க முற்பட்ட போது, பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இதன்போது காயமடைந்த 13 பேர் மனம்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.



