ராஜபக்ஷர்களைத் திணற வைத்துள்ள புலம்பெயர் இலங்கையர்கள்!

Nila
3 years ago
ராஜபக்ஷர்களைத்  திணற வைத்துள்ள புலம்பெயர் இலங்கையர்கள்!

ராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கைக்கு டொலர் அனுப்ப மாட்டோம் என வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

 தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக  சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நாடுகளில் வாழும் இலங்கையர்கள் போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர்.
 
அமெரிக்காவின் வொஷிங்டன் டிசி, நியூயோர்க், நெப்ராஸ்கா, விஸ்கொன்சின், அயோவா, ஓக்லஹோமா, நியூ மெக்சிகோ, கென்டாக்கி, அரிசோனா, சென் பிரான்சிஸ்கோ, லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஓரிகான் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
 
மேலும், ஒக்லாந்து, நியூசிலாந்து, மெல்பர்ன், அவுஸ்திரேலியா மற்றும் லண்டன் நாடாளுமன்றம் முன்பாக இலங்கையர்கள் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.
 
வெளிநாடுகளில் வசிக்கும் சுமார் 2.5 மில்லியன் இலங்கையர்கள் நாட்டிற்கு டொலர்களை அனுப்ப தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் ராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கும் வரை அவ்வாறு செய்ய முடியாது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!