அரசின் BMW X5 காரை எடுத்து சென்றதாக புதிய குற்றச்சாட்டில் சிக்கிய இம்ரான் கான்

#Pakistan #ImranKhan
Prasu
3 years ago
அரசின் BMW X5 காரை எடுத்து சென்றதாக புதிய குற்றச்சாட்டில் சிக்கிய இம்ரான் கான்

பாகிஸ்தானின் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அமைச்சர் மரியம் ஔரங்கசீப் ஒரு பரபரப்பு குற்றசாட்டை வைத்துள்ளார். பிரதமர் பதவியை விட்டு செல்லும் போது, இம்ரான் கான் BMW X5  காரை எடுத்துச் சென்றதாகக் கூறுகிறார்.

BMW  அரசின் அதிகாரபூர்வ வாகனம் என்பதோடு, வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கான பிரதமர் அலுவலகத்தின் வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரத்தில் இருக்கும் பிரதமர்  மட்டுமே இந்த வாகனங்களைப் பயன்படுத்த முடியும் என்று ஔரங்கசீப் கூறியதாக டான் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக இந்த காரை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று இம்ரான் கான் விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால், தனது ஆட்சிக் காலத்தில், பிரதமர் இல்லத்தில் விலை உயர்ந்த கார்கள் இருந்ததாக முந்தைய அரசை விமர்சித்தார் என விமர்சனம் எழுந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு அந்த காரை வாங்கும் போது அதன் விலை 30 மில்லியன் பாகிஸ்தான் ரூபாயாக இருந்ததாகவும், அது தற்போது 60 மில்லியன் பாகிஸ்தான் ரூபாயாக உள்ளதாக  பாகிஸ்தானின் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அமைச்சர் கூறினார். வெடிகுண்டு  மற்றும் குண்டு துளைக்காத அம்சத்தையும் சேர்த்து கணக்கிட்டால், வாகனத்தின் விலை சுமார் 150 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் என கூறப்படுகிறது.

மேலும் இம்ரான் கான் பரிசுகளை தக்கவைத்துக் கொள்ளும் சதவீதத்தை 20 சதவீதமாகக் குறைத்து, பின்னர் அதை 50 சதவீதமாக உயர்த்தியதாக மரியம் அவுரங்கசீப் கூறுகிறார். மற்றுமொரு நாட்டைச் சேர்ந்த இராஜதந்திரி ஒருவர் பரிசளித்த கைத்துப்பாக்கியை அரசுக்கு சொந்தம் என அறிவித்து அதனை அரசிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக, கான் துப்பாக்கியை தன்னிடம் வைத்திருந்ததாகவும் அமைச்சர் ஊடகங்களிடம் தெரிவித்தார். இம்ரான் கானைக் குறிப்பிட்டு பேசிய தகவல் துறை அமைச்சர், "நீங்கள் ஒரு திருடன், ஒரு ஏமாற்றுக்காரர், பொய்யர் மற்றும் குண்டர், ஆனால் தவறுகளையும் ஊழலையும் மறைக்க உங்களை ஒரு புனித நபராக காட்ட முயற்சிக்கிறீர்கள்." என சாடினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!