ரஞ்சனின் விடுதலைக்காக விசேட குழு நியமனம்
#SriLanka
#Sajith Premadasa
#Lanka4
Shana
3 years ago

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக போராடுவதற்க்கு விசேட குழுவொன்றை ஐக்கிய மக்கள் சக்தி நியமித்துள்ளது.
புதிய மகசீன் சிறைச்சாலையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவைச் சந்தித்துப் பேசியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அது இடம்பெறவில்லை என தெரிவித்த சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



