கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம்
#SriLanka
#Mullaitivu
#Lanka4
Shana
3 years ago

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் கிணற்றில் விழுந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கடற்றொழில் நடவடிக்கைக்காக வந்த ஒருவரே கிணற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு உயிரிழந்த நபர் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த 37வயதுடைய கே.பிரதீப் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



