மைத்திரி வௌியிட்ட அவசர கடிதம்!

#SriLanka #Maithripala Sirisena #Lanka4
Shana
3 years ago
மைத்திரி வௌியிட்ட அவசர கடிதம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட செயலாளர் சமீர டி சில்வாவினால் இந்த கடிதம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,

​​மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் கொள்ளையிடப்பட்ட பணத்தில் ஒரு பகுதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக ஊழல் ஒழிப்பு குரலின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்கவினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி நபர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது தார்மீக அரசியல் செயல் அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த திங்கட்கிழமை கருத்து குறித்து எதிர்காலத்தில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இன்று (03) இலங்கை மன்ற கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டிருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!