நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு
Prathees
3 years ago

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் 270 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை பழுதுபார்க்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது.ஐந்து நாட்களுக்குள் ஆலை மீண்டும் தேசிய மின்கட்டடத்துடன் இணைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.
அனல் மற்றும் நீர் மின் நிலையங்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் மின்வெட்டுகளை மேலும் நீடிக்காமல் நிர்வகிக்கப்படும் என அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.



