வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளை கண்டறிய அமைச்சரவை குழு
#SriLanka
#Investment
#Minister
Mugunthan Mugunthan
3 years ago

வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கக்கூடிய முதலீட்டு வாய்ப்புகளை கண்டறிய ஐந்து பேர் கொண்ட அமைச்சரவைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவின் மற்ற உறுப்பினர்கள்:
அமைச்சர் திலும் அமுனுகம
அமைச்சர் காஞ்சன விஜேசேகர
அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த
நாட்டின் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக அன்னிய முதலீடுகளை ஈர்ப்பது முக்கியமானது என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.



