உக்ரைன் எல்லையில் சிக்கிய 2.5 லட்சம் ரூபா பிரமாண்ட உடை... திருமணம் அன்று ஏமாற்றம்!

Mayoorikka
3 years ago
உக்ரைன் எல்லையில் சிக்கிய  2.5 லட்சம் ரூபா பிரமாண்ட உடை... திருமணம் அன்று ஏமாற்றம்!

கெல்லி மேரி கேம்பல் என்ற பெண்ணுக்கு, தனது திருமண உடை மிக ஆடம்பரமாக, பிரம்மிப்பூட்டும் வகையில் இருக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. இவருக்கு திருமணத் தேதி நிச்சயிக்கப்பட்டு, கொரோனா பெருந்தொற்று காரணமாக 3 முறை திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக கடந்த 31ஆம் தேதி இவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்தத் திருமணத்திற்காக ரூ.2.5 லட்சம் மதிப்பிலான உடையை கெல்லி மேரி வாங்கியிருந்தார். ஆனால், அவரது உடல் அளவைக் காட்டிலும் 3 மடங்கு பெரியதாக இருந்த அந்த உடை அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

திருமணத்திற்கான உடையை ஸி பிரைடல் என்னும் நிறுவனத்திடம் வாங்குவதற்கு கெல்லி மேரி முடிவு செய்தார். இந்த நிறுவனத்திற்கான உடையை, இஸ்ரேலை அடிப்படையாகக் கொண்ட ரிகி தலால் என்ற டிசைனர் நிறுவனம் உற்பத்தி செய்து கொடுக்கிறது. இவர்களுடைய உற்பத்தி பிரிவு ஒன்று உக்ரைனில் செயல்பட்டு வருகிறது.

கெல்லி மேரி தனது திருமண உடைக்கு முன்கூட்டியே ஆர்டர் செய்திருந்த நிலையில், திருமணத்திற்கு 6 முதல் 8 வாரங்கள் முன்பாக அது வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திருமணத்திற்கு 4 வாரங்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையிலும், உடை வந்து சேரவில்லை. இதனால், கெல்லி மேரி பதற்றம் அடையத் தொடங்கினார்.
 
இதைத் தொடர்ந்து ஸி பிரைடல் நிறுவனத்தை அவர் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசினார். ஆனால், அவர்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும், காத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதற்கிடையே, மேலும் ஒரு வாரம் கழிந்து விட்டது. இப்போது திருமணத்திற்கு 3 வாரம் மட்டுமே எஞ்சியிருந்தது. அப்போது, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதன் காரணமாக, உக்ரைன் எல்லையில், திருமண உடையின் பார்சல் சிக்கிக் கொண்டுள்ளது என்று கெல்லி மேரிக்கு தகவல் தெரிவித்தனர்.

பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு, ஒரு வழியாக திருமணத்திற்கு ஒரு வாரம் எஞ்சியிருந்த நிலையில் உடை வந்து சேர்ந்தது. ஸி பிரைடல் நிறுவனத்திற்கு வந்து டிரையல் பார்த்துக் கொள்ளுமாறு கெல்லி மேரிக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, கடைக்குச் சென்று உடையை அணிந்து பார்த்த அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது, கெல்லி மேரியின் உடல் அளவைக் காட்டிலும் மூன்று மடங்கு பெரியதாக அது இருந்தது. இதுகுறித்து பிரைடல் நிறுவனத்திடம் அவர் கேட்டபோது, நீங்கள் முன்பு இருந்ததை விட இப்போது எடை குறைந்துவிட்டீர்கள் என்று பதில் அளித்தார்களாம்.

அளவில் பெரியதாக இருந்த உடைக்கு, கூடுதல் கட்டணம் செலுத்தி ஆல்டரேசன் செய்தார் கெல்லி மேரி. அதற்குப் பிறகும் கூட, அந்த உடை அவருக்கு சௌகரியமானதாக இல்லை. திருமணம் செய்ய திட்டமிடும் இளம்பெண்கள் யாரும் தன்னைப் போல ஆன்லைனில் ஆர்டர் செய்து ஏமாந்துவிடக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!