ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் கருங்கடல் உலகளவில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம்!

உக்ரைன் மீதான போர் காரணமாக உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கருங்கடலை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஷ்யா, உக்ரைனிலிருந்து கப்பல் செல்லவும், உக்ரைனுக்கு கப்பல்கள் வருவதையும் தடுக்கிறது.
அதன் கருங்கடல் துறைமுகங்களை ரஷ்யா முற்றுகையிடுவதால் பல மில்லியன் டன் தானியங்களை உக்ரைன் இழக்க நேரிடும்.
ரஷ்யா, எங்கள் நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலுமாக அழிக்க விரும்புகிறது. இந்த மோதல் உலக நாடுகளை பாதிக்கும் உணவு நெருக்கடியை தூண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.
உலக உணவு தயாரிப்பில் ரஷ்யா மற்றும் உக்ரைன் முக்கிய அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, சூரியகாந்தி எண்ணெய் மற்றும் விதைகளில் உலகளாவிய வர்த்தகத்தில் 53% மற்றும் கோதுமையில் 27% ஆகியவற்றை ரஷ்யா மற்றும் உக்ரைனிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.



