பூமிக்கு மிக அருகே வரும் இராட்சத சிறுகோள்! மனிதர்களுக்கு ஆபத்தா?

சுமார் 1.8 கிலோ கிலோமீட்டர் அகலமுள்ள அபாயகரமான “ஆஸ்டிராய்டு” எனப்படும் சிறுகோள் விரைவில் பூமிக்கு மிக அருகே வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆஸ்டிராய்டுகள் அரிதினும் அரிய நிகழ்வாக சில சமயம் பூமியின் சுற்றுவட்டார பாதையில் நுழையும். அப்போதும் கூட பூமியை அடையும் முன்பு, அவை வெப்பத்தில் பஸ்பம் ஆகிவிடும்
இதனிடையே சுமார் 1.8 கிலோமீட்டர் அகலமுள்ள அபாயகரமான சிறுகோள் ஒன்று சூரியனைச் சுற்றி வரும் பாதையில் பூமிக்கு அருகே வர உள்ளது.
1.8 கிலோமீட்டர் அகலம் என்றால், இமயமலை அளவு என்று கூறலாம். மணிக்கு 47,196 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் இந்த சிறுகோள் இந்த மாதம் இறுதியில் பூமிக்கு நெருக்கத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்ற போதிலும், இதை அபாயகரமானதாக நாசா வகைப்படுத்தியுள்ளது.
பூமியில் இருந்து சுமார் 40,24,182 கிலோமீட்டர்கள் தொலைவில் இந்த ஆஸ்டிராய்டு வரும். இது பார்க்கத் தொலைதூரம் போல தோன்றினாலும் கூட பறக்கும் பொருளுக்கு இது ஆபத்தானது தான்.
இந்த ஆஸ்டிராய்டு அடுத்ததாக செப். 2029ஆம் ஆண்டு பூமிக்கு அருகே வரும். அதன் பின்னர் 2055 மற்றும் 2062 ஆகிய ஆண்டுகளில் இந்த ஆஸ்டிராய்டு பூமிக்கு அருகே வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது
.



