இடைக்கால பிரதமர் நிமல் சிறிபால அல்லது டலஸ்!
Mayoorikka
3 years ago

பிரதமர் பதவியை இராஜினாமா செய்து அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு நிமல் சிறிபால டி சில்வா அல்லது டலஸ் அழகப்பெரும ஆகிய இருவரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்திற்கான வேட்பாளரை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட தேசிய வழிநடத்தல் குழு தெரிவு செய்யும்.
இடைக்கால நிர்வாகத்துக்கான 11 விடயங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இக்குழு நேற்று கலந்துரையாடியுள்ளது.
எதிர்காலத்தில், சமகி ஜன பலவேகய, ஜனதா விமுக்தி பெரமுன உட்பட, பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் இடைக்கால அரசாங்கத்திற்காக கலந்துரையாடல்களை நடத்த உள்ளது.



