பிரதமர் பதவி குறித்து பசில் கருத்து!
Prabha Praneetha
3 years ago

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை கருத்திற் கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக தீர்மானம் எடுக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ நேற்று சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறானதொன்று நடந்தால், புதிய அரசாங்கத்தின் புதிய பிரதமருக்கான வேட்பு மனுக்களை கட்சித் தலைமைக் குழுவொன்று கோரினால், மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர வேறு யாரையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிறுத்தாது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவே பிரதமர் பதவியை வகிக்க வேண்டும் என்பது கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்படுத்திய இணக்கப்பாடு எனவும், அந்த மக்கள் ஆணையைத் தவிர வேறு யாரையும் நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இல்லை எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



