நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி: விசேட பண கொடுப்பனவு வழங்கப்படும்
Mayoorikka
3 years ago

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, அடையாளம் காணப்பட்ட 3.34 மில்லியன் குடும்பங்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை விசேட பண கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



