நாளை பிரதமர் ராஜினாமா? ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பேச்சாளர்
Mayoorikka
3 years ago

நாளைய தினம் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றுவதற்கு, சபாநாயகரிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
நாளை பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய பின்னர் பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை, பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவை பொதுஜன பெரமுன பரிந்துரை செய்துள்ளது.
எவ்வாறாயினும், டிலான் பெரேரா அதனை நிராகரித்துள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.



