வீட்டில் சேமித்து வைத்த பெற்றோலால் மாணவி உடல் கருகி மரணம்!
#SriLanka
#Jaffna
#Lanka4
Shana
3 years ago

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்புபிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை இடம்பெற்ற தீ விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை மகாஐனாக் கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கற்கும் மாணவியான சுதன் சதுர்சியா (வயது 17) எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்.
சுவாமிபடத்திற்கு விளக்கேற்றிய தீக்குச்சியை எறிந்தபோது அறையில் வைத்திருந்த பெற்றோல் மீது அது பட்டுத் திடீரென தீ பற்றியதால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதனை அறிந்த அயலவர்கள் வீட்டில் பரவிய தீயினை அணைத்து, மாணவியை அங்கிருந்து மீட்டு சங்கானை வைத்திசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
வைத்தியசாலையில் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.



