சஜித்-அநுர சர்வகட்சி அரசாங்கத்தில் இணைய முடியாது என கூறினர்: வாசுதேவ

Prathees
3 years ago
சஜித்-அநுர சர்வகட்சி அரசாங்கத்தில் இணைய முடியாது என கூறினர்: வாசுதேவ

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துமாறு கோருகின்ற போதிலும் தற்போது தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை ஆறு மாதங்களில் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் பாராளுமன்றத்தை கலைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எவருக்கும் தேவையான வாக்குகள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் மக்கள் தேர்தலை கோரவில்லை. சஜித்தோ அல்லது அனுரவோ மக்களின்  சுமையை குறைக்க விரும்பவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!