இந்திய உயா்ஸ்தாணிகராலயத்தினால் 100 குடும்பங்களுக்கு உலர் உணவு ரமலான் பொதி
Prasu
3 years ago

கொழும்பில் உள்ள இந்திய உயா்ஸ்தாணிகா் ஆலயத்தினால் ரமலான் காலத்தில்
வறுமைக் கோட்டில் வாழும் 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை கல்முனையில் நேற்று 29 ஆம் திகதி பகிா்ந்தளித்தது.அகில இலங்கை -வை.எம்.எம். ஏ அமைப்பின் மகளிா் அணித் தலைவி பவசா தாஹா அவா்களின் ஒருங்கிணைப்பில் இப் பொதிகள் கல்முனையில் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு கல்முனை பிரதி மேயா் ரஹூமத் மன்சூர் தலைமையில் நடைபெற்றது. இந்திய உயா் ஸ்தாணிகா் ஆலயத்தின் இரண்டாவது செயலாளா் அசோக் குமாா் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இப் பொதிகளை பகிா்ந்தளித்தாா்



