சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடு
Prabha Praneetha
3 years ago

இன்று இடம்பெறும் சர்வதேச தொழிவாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை மாகாணங்களில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் தொடர்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.



