காபூல் மசூதியில் குண்டுவெடிப்பு: 50க்கும் மேற்பட்டோர் பலி

Prathees
3 years ago
காபூல் மசூதியில் குண்டுவெடிப்பு:  50க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தான் காபுல் நகரில் பள்ளிவாசல் ஒன்றின்மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 50 இற்க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த சம்பவத்தில் 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும்  ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகளின் தூதரகம் இந்த தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மசூதியின் தலைவரான சையத் ஃபாசில் ஆகா கூறுகையில்,

தற்கொலை குண்டுதாரி என்று தாங்கள் நம்பும் ஒருவர் விழாவில் கலந்து கொண்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.

"கறுப்பு புகை எழுந்து எங்கும் பரவியது, இறந்த உடல்கள் எல்லா இடங்களிலும் இருந்தன," என்று அவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்,

 "நானே உயிர் பிழைத்தேன், ஆனால் என் அன்புக்குரியவர்களை இழந்தேன்.என்றார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!