இரண்டு எரிபொருள் கப்பல்களுக்கு கொடுக்க பணமில்லை! மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
Prathees
3 years ago

நாட்டிற்கு வந்துள்ள இரண்டு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்களுக்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
வார இறுதிக்குள் இறக்கும் பணி ஆரம்பிக்கப்படாவிட்டால் அல்லது மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் வரிசைகளும் ஏற்படக்கூடும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டுள்ளதுடன், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்ச்சியாக எரிபொருளை வழங்கி வருகின்றன.
ஆனால் எரிபொருள் தாங்கிகளை விடுவிக்காவிட்டால் நாட்டில் முன்பு போல் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இரண்டு எரிபொருள் டேங்கர்களை விடுவிப்பதற்கான டொலர் கட்டணம் ஏற்கனவே தாமதமாகிவிட்டதால், தாமதமான நாட்களின் எண்ணிக்கைக்கு தாமதக் கட்டணம் செலுத்தப்படும்.



