பிரதமர் மகிந்த ராஜபக்ச நன்றியுள்ள தலைவர்! புகழும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
Reha
3 years ago

பிரதமர் மகிந்த ராஜபக்ச நன்றியுள்ள தலைவர் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் புகழ்ந்து பேசியுள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச நாரஹேன்பிட்டி அபராமய விகாரைக்கு சென்று முருத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
பிரதமர் மற்றும் அமைச்சரவையை இராஜினாமா செய்யுமாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த ஆனந்த தேரர்,
இந்த கலந்துரையாடல் ஒன்றும் புதிதல்ல எனவும், பிரதமர் அபயராமய விகாரைக்கு வழமையாக வருகை தருபவர் எனவும் தெரிவித்தார். "அவர் ஒரு நன்றியுள்ள தலைவர்," என்றும் ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.



