அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கை பொறியியலாளர் உயிரிழப்பு
#Australia
#Death
Prasu
3 years ago

அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கை பொறியியலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பஹா, யக்கல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த பெண் தற்போது அவுஸ்திரேலியாவின் கான்பராவில் வசித்து வருகிறார்.
இவரது கணவரும் அந்நாட்டில் பொறியாளராக பணிபுரிகிறார்.
அவர் தனது கணவர் உட்பட மற்றொரு குழுவுடன் கடற்கரைக்கு சுற்றுலா சென்றபோது அலையினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த பெண்ணின் சடலம் சிட்னி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது



