ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கைக்கு கல்வி அமைச்சு இணக்கம்
Mayoorikka
3 years ago

எரிபொருள் செலவுகள் மற்றும் தற்போதைய நிலைமைக்கு மத்தியில், அருகிலுள்ள பாடசாலையில் கடமையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு, ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இணக்கம் தெரிவித்துள்ளார்.
எனினும், இவ்வாறானதொரு தீர்மானத்தை உடனடியாக அமுலாக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைக்குமாயின், தரவுகளை மதிப்பாய்வு செய்து, இந்த நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் என கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.



