இன்றுடன் 21 ஆவது நாளாகவும் தொடர்கிறது காலி முகத்திடல் போராட்டம்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு - காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் 21 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
மழை வெயில் பாராது இளைஞர்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்து அந்த பகுதிக்கு "கோட்டாகோகம" என பெயர்சூட்டி இன்றுடன் 21 ஆவது நாளாக போராடி வருகின்றனர்.
இதேவேளை, கடந்த காலங்களில் காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி , அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாதைகள் நேற்று முன்தினம் காலி முகத்திடலில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் சகல தொழிற்சங்கங்களும் இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெருமளவான தொழிற்சங்கங்களும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



