ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு- 9 பேர் உயிரிழப்பு
#Afghanistan
#Attack
#Death
Prasu
3 years ago

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் இன்று இரண்டு இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. பார்க் மாகாண தலைநகர் மசார்-இ-ஷரிபில் இரண்டு வாகனங்களை குறிவைத்து அடுத்தடுத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில், 9 பேர் கொல்லப்பட்டனர்; 13 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சம்பவ இடத்தை தலிபான் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஷியா சிறுபான்மை பிரிவான ஹசாரா சமூகத்தைச் சேர்ந்தவர்களை குறிவைத்திருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கடந்த வாரம், மசூதி மற்றும் அதை ஒட்டிய மதப் பள்ளி கட்டிடத்தில் குண்டு வெடித்ததில் 33 ஷியா பக்தர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



