30 மாதங்களில் நாட்டை கொள்ளையடித்து வங்குரோத்தாக்கியது ராஜபக்ச குடும்பம்: சஜித் பிரேமதாச

Mayoorikka
3 years ago
30 மாதங்களில் நாட்டை கொள்ளையடித்து  வங்குரோத்தாக்கியது ராஜபக்ச குடும்பம்: சஜித் பிரேமதாச

30 மாதங்களுக்குள் ராஜபக்ச குடும்பம் நமது நாட்டை வக்குரோத்து அடைந்த நாடாக மாற்றிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்நாட்டின் தேசிய வளங்கள், தேசிய சொத்துக்கள், தேசிய நிதி என்பவற்றை திருட்டுத்தனமாக கொள்ளையடித்ததன் காரணமாகவே நாடு இவ்வளவு வக்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊழலையும் திருட்டையும் கட்டுப்படுத்தும் முகமாக சுதந்திரமான சக்தி வாய்ந்த ஒரு நிறுவன கட்டமைப்பை ஸ்தாபிப்பதாகவும், அதை எந்த வகையிலும் மாற்ற முடியாதவாறு நிரந்தர நிறுவனமாக அதிகாரமளிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் அமையப்பெறும் ஓரு அரசாங்கத்தின் கீழ் திருடர்களை பிடிக்கும் பொறுப்பு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கே வழங்கப்படும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எக்காரணத்தைக் கொண்டும் இந்நிலைப்பாடு மாறாது எனவும் அவர் தெரிவித்தார்.

மக்களின் பணத்தை திருடிய குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தண்டிக்கும் பொறுப்பு சார் அதிகாரம், முப்பது வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த சரத் பொன்சேகாவிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வேறு எவருடனும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்த டீலும் இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களுடனயே தனக்கு டீல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அடக்குமுறை மிக்க கொடுங்கோல் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த “சுதந்திரத்திற்கான போராட்டம்” ஐக்கிய சக்தி பாத யாத்திரையின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில் இன்று(28) கலிகமுவ நகரில் ஆரம்பமாகியது.இந்த பாத யாத்திரையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!