மகிந்தவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால் எதிர்க்கட்சித் தலைவர் நாமல்!
Mayoorikka
3 years ago
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால் நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக்கப்படுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்க வேண்டாம் என குறித்த குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால் 100க்கும் மேற்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியில் இணைந்து நாமல் ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.