இலங்கை நடிகை அனுஷா சோனாலி காலமானார்!
Nila
3 years ago

இலங்கை நடிகை அனுஷா சோனாலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 47 வயதில் காலமானார்.
கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக நடிகை உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அவர் இறப்பதற்கு முன்பு சில காலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
1995 ஆம் ஆண்டு சரசவி திரைப்பட விழாவில் சிறந்த வளர்ந்து வரும் நடிகைக்கான விருதைப் பெற்றார்.
அனுஷா சோனாலி விசிடீலா உட்பட பல பிரபலமான படங்களில் நடித்துள்ளார்.



