உள்ளூர் உணவு உற்பத்தியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிடின் உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும் - நிபுணர்கள் எச்சரிக்கை!
Reha
3 years ago

விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளூர் உணவு உற்பத்தியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிடின் இந்நாட்டு மக்கள் விரைவில் உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும் என விவசாயதுறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நாட்டில் நெல் அறுவடை 45 வீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர். பல்வேறு பகுதிகளில் யூரியா உரத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விலை உயர்வால் விவசாயிகள் யூரியா உரம் கொள்முதல் செய்வது குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.



