விமான நிலைய வளாகத்தில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகம்!
Mayoorikka
3 years ago

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகம் ஒன்று இன்று திறக்கப்பட உள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.
அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு உணவகத்தின் முன் ஒரு கொள்கலனில் அமைந்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கப் பிரதிநிதியான ஜஃப்மா என்ற சந்திமா தலைமையில் இது இடம்பெற்றது.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் இவ்வாறானதொரு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளமை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பலப்படுத்துவதற்கு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதை விடுத்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் வழங்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.



