மகிந்த திருப்பதிக்கு சென்ற ஜெட் விமானம் பற்றி கூறியதற்காக ஹிருணிகாவிடம் 500 மில்லியன் ரூபா கோரிய கனநாதன்

Prathees
3 years ago
மகிந்த திருப்பதிக்கு சென்ற ஜெட் விமானம் பற்றி கூறியதற்காக ஹிருணிகாவிடம் 500 மில்லியன் ரூபா கோரிய  கனநாதன்

கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கு எதிராக நட்டஈடு கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த வருடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட ஜெட் விமானத்தின் உரிமையாளர் கனநாதன் என ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

கனநாதன் விடுதலைப் புலி உறுப்பினர் என்றும் உகாண்டாவில் உள்ள சிலோன் கபேயின் உரிமையாளர் என்றும் விடுதலைப் புலிகளிடமி கைப்பற்றப்பட்ட மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் கனநாதன் வசம் இருப்பதாகவும் ஹிருணிகா  கூறினார்.

கனநாதன் தனது சட்டத்தரணி ஊடாக அனுப்பி வைத்துள்ள கோரிக்கைக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்

இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் ஜோடிக்கப்பட்டவை. இது மலிவான அரசியல் ஆதாயம் மற்றும் நாசகார நோக்கங்களுக்காக நடத்தப்பட்ட ஒரு பாத்திரப் படுகொலையைத் தவிர வேறில்லை. 

குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக வாபஸ் பெற வேண்டும் அல்லது 2022 ஏப்ரல் 27 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் முறையான மன்னிப்புடன் 500 மில்லியன் ரூபாவை அபராதமாக செலுத்துமாறு ஹிருணிகாவிடம் கண்ணநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பதினான்கு நாட்களுக்குள் ஹிருணிகா அவ்வாறு செய்யத் தவறினால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!