13 வருடங்களுக்கு பின் தேசிய ரீதியில் பணவீக்கம் 21.5 வீதமாக அதிகரிப்பு
#SriLanka
Mugunthan Mugunthan
3 years ago

தேசிய ரீதியில் பணவீக்கம் 20 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
2022 மார்ச் மாதம் 21.5 சதவீதமாக பணவீக்கம் காணப்படுவதாக புள்ளி விபரவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தின் போது இதனைவிட சற்று அதிகமாக அதாவது 24.3 வீதமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது எனினும், கடந்த 5 மாத காலமாக பணவீக்கம் இரட்டை இலக்கத்தால் அதிகரித்து வருகிறது.
உணவு தொடர்பான பணவீக்கம் மார்ச் மாதம் 29.5 சதவீதமாக காணப்பட்டது.
கடந்த 8 மாதக்கலாமாக உணவு தொடர்பான பணவீக்கம் இரட்டை இலக்கத்திலேயே அதிகரித்து வருகின்றது.
மேலும் உணவு தவிர்ந்த பணவீக்கமானது கடந்த மூன்று மாத காலமாக இரட்டை இலக்கத்தில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.



