அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த மற்றுமொரு அமைச்சர்! அம்பலப்படுத்த வேண்டாம் எனவும் பணிப்புரை
Mayoorikka
3 years ago

நாலக கொடஹேவா தனது அமைச்சரவை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கொடஹேவா அமைச்சரவை அமைச்சராக கடந்த 18ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போதிலும், அவரது இராஜினாமா கடிதம் கடந்த 20ஆம் திகதியே ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்ற நிலையில், தனது இராஜினாமா கடிதத்தை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என ஜனாதிபதிக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



