எத்தியோப்பியா போன்று இல்லை இலங்கை: பொதுமக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும்! பந்துல

Mayoorikka
3 years ago
எத்தியோப்பியா போன்று இல்லை இலங்கை: பொதுமக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும்! பந்துல

எத்தியோப்பியா போன்று வாரத்திற்கு ஒரு முறை எரிவாயு விநியோகம் செய்யும் நாடு இலங்கை அல்ல என்பதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் வர்த்தக அமைச்சர், இலங்கை மட்டுமன்றி முழு உலகமும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்று தெரிவித்தார்.
 
இந்த பொருளாதார நெருக்கடி உலகம் முழுவதும் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திலும் மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளதாக கூறினார்.

1930 இலிருந்து உலகம் எதிர்கொள்ளும் மோசமான பொருளாதார நெருக்கடி இதுவாகும். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அரசியல்வாதிகளின் பேராசையே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!