காலி முகத்திடலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தேர வைத்தியசாலையில் அனுமதி
Nila
3 years ago

காலி முகத்திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வண.தெரிப்பெஹே சிறிதம்ம தேரருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எவ்வாறாயினும், வண. தெரிபெஹே சிறிதம்ம தேரருக்கு பதிலாக மேலும் இரு தேரர்கள் உண்ணாவிரதத்தில் இணைந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.



