பதவி விலக தயாராகும் பிரதமர் மஹிந்த தடுக்கும் கோட்டாபய: இதுதான் காரணம்!
Mayoorikka
3 years ago

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகத் தயாராகி வருகின்ற போதிலும், அதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்று வரும் கலந்துரையாடல்களே இதற்குக் காரணம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த வகையிலும் பிரதமர் பதவி விலகினால் ஒட்டுமொத்த அமைச்சரவையும் இராஜினாமா செய்ததாக கருதப்படும் எனவும் தற்போது அமெரிக்காவில் இருக்கும் நிதியமைச்சர் அலி சப்ரிக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதி பிரதமரிடம் தெரிவித்துள்ளதாவும் அந்த ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



