1.25 மில்லியன் டொலருக்கு விற்பனையாகும் மிகச் சிறிய புத்தகம்

Prasu
3 years ago
1.25 மில்லியன் டொலருக்கு விற்பனையாகும் மிகச் சிறிய புத்தகம்

உலகின் மிகச்சிறந்த பழங்கால புத்தகக் கண்காட்சியில் 1.25 மில்லியன் டொலர் மதிப்புள்ள சார்லோட் ப்ரோன்டே உருவாக்கிய ஒரு சிறிய புத்தகம் விற்பனை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

நியூயோர்க்கில் நடைபெறும் நான்கு நாள் கண்காட்சி விற்பனையாளர்களுக்கு நல்ல இலாபத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மை காலமாக விற்பனை அதிகரித்துள்ளதாக புத்தக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச பழங்கால புத்தகக் கண்காட்சி நிகழ்வின் 61ஆவது பதிப்பு நியூயோர்க்கில்  இடம்பெறுகிறது. இது கீழ் மன்ஹாட்டனில் உள்ள பார்க் அவென்யூ  ஆர்மரியில் நடைபெறுகிறது.

நிகழ்வுக்கு முன்னதாக, 1829ஆம் ஆண்டு வெறும் 13 வயதில் ஆங்கில நாவலாசிரியரும் கவிஞருமான சார்லோட் ப்ரோண்டே எழுதிய அண்மையில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட புத்தகம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

புத்தகத்தின் விற்பனையாளர் 1.25 மில்லியன் டொலர்களுக்கு இதனை விற்பனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது ஒரு பெண் எழுத்தாளரின் படைப்பிற்கு கிடைக்கும் அதிகபட்ச தொகை எனக் குறிப்பிடப்படுகின்றது. 

இந்த கண்காட்சி இன்று முதல் ஏப்ரல் 24 வரை நடைபெறுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!