ரஷ்யாவிற்குள் நுழைய கமலா ஹாரிஸ் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோருக்கு தடை

#Russia #Zuckerberg
Prasu
3 years ago
ரஷ்யாவிற்குள் நுழைய கமலா ஹாரிஸ் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோருக்கு தடை

மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலை ரஷ்யா இன்று பிற்பகல் நீட்டித்துள்ளது.

தற்போது அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி ஆகியோர் இந்த தடையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 29 அமெரிக்க அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.இந்த நபர்கள் காலவரையின்றி ரஷ்ய கூட்டமைப்பிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.பாரக் ஒபாமாவுக்கு துணை ஜனாதிபதியான இருந்த 2011-ம் ஆண்டுக்குப் பிறகு பிடன் ரஷ்யாவுக்குச் செல்லவில்லை. மொஸ்கோ பயணத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன், சிஐஏ தலைவர் வில்லியம் பர்ன்ஸ், பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோரும் மார்ச் மாதம் தடை செய்யப்பட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!