உக்ரைன் போர்க்கைதிகள் 19 பேரை விடுவித்த ரஷ்யா
#Russia
#Ukraine
Prasu
3 years ago

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷியா, மரியுபோல் நகரத்தை கைப்பற்றி உள்ளது. அங்குள்ள உக்ரைன் ராணுவ வீரர்களை சரண் அடையும்படி ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு தீவிரமாக போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் போர்க் கைதிகள் 19 பேரை ரஷியா விடுவித்திருக்கிறது.
இதுபற்றி உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறுகையில், ‘மற்றொரு கைதிகள் பரிமாற்றம் நடந்துள்ளது. இந்த முறை விடுவிக்கப்பட்டவர்களில் காயமடைந்தவர்களும் உள்ளனர். இது முக்கியமானது. இப்போது அவர்கள் முழு சிகிச்சையைப் பெற முடியும், மறுவாழ்வும் பெற முடியும்’ என்றார்.
இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாயன்று விடுவிக்கப்பட்ட 60 வீரர்கள் உட்பட 76 உக்ரேனியர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.



