நாட்டு மக்கள் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை!
Mayoorikka
3 years ago

பொதுமக்கள் தங்களது நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவசியமான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு மக்கள் பசியின்றி வாழ்வதற்கு அவசியமான சூழலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அறிக்கை ஒன்றின் மூலம் மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
எரிவாயு, எரிபொருள் உட்பட நுகர்வுப் பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், தட்டுப்பாடின்றி அந்தப் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதன் மூலம், போராட்டங்கள் பரவுவதைத் தடுக்க முடியும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.



